Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார்.1.5 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

குடியாத்தம், ஜூலை 9: பரதராமி காவல் நிலைய பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1.5 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் குடியாத்தம் அடுத்த பெருமாள்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்ததில், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஐயாவு மகன் ஆகாஷ்(23), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் மகன் சேகர்(23) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.