Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கார்ப்பரேட் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகளில் 6 லட்சம் கடைகள் காணாமல் போய்விடும்: கே.வி.குப்பத்தில் விக்கிரமராஜா பேட்டி

கே.வி.குப்பம், செப்‌.7: கார்ப்பரேட் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகளில் 6 லட்சம் கடைகள் காணாமல் போய்விடும் என வியாபாரிகள் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா கூறினார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூரில் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட வியாபாரிகள் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உணவு பாதுகாப்பு துறை சாமானிய மக்களிடம் கையூட்டு பெறுவதை தடை செய்ய வேண்டும். வியாபாரிகளிடத்தில் சேம்பிள்கள் எடுக்கும்போது அதிக பொருட்களை ஒரே இடத்தில் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக அரக்கோணத்தில் ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவிட்டு பணம் தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். கார்ப்பரேட் கம்பெனியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் 5 ஆண்டுகளில் 6 லட்சம் கடைகள் காணாமல் போய்விடும். எனவே மாநில உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு கடைகளுக்கு தீபாவளி நெருக்கத்தின்போது லைெசன்ஸ் தராமல் இழுத்தடிப்பதை தவிர்க்க இப்பொழுதே அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் சிறிய வியாபாரிகள் பாதிப்பு அடைகின்றனர். தமிழ்நாடு வியாபாரி சங்கம் சார்பில் தமிழக அரசிடம் ஏற்கனவே பல கோரிக்கைகளை வைத்துள்ளோம். இதுவரை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக விரைவில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.