Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஒரேநாளில் விற்பனைக்கு குவிந்த 3 ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகபட்சமாக நர்மதா ரகம் ரூ.1,950க்கு விற்பனை அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

ராணிப்பேட்டை, மே 7: அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒரேநாளில் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் நர்மதா ரக நெல் மூட்டைகள் அதிகபட்ச விலையாக ரூ.1,950க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: இதில் ஏடிடி 37 குண்டு ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,267க்கு மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,487க்கும், 1010 வகை ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,383க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோ-51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,301க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,539க்கும், ஆர்.என்.ஆர். ரக குறைந்தபட்ச விலை ரூ.1,509க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,941க்கும், கோ 55 ரக குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,493க்கும், 606 ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,559க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,932க்கும்

நர்மதா வகை ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,889க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,950க்கும், அன்னம் வகை ரக நெல் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை ரூ.1,679க்கும், வெள்ளை பொன்னி வவை ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,453க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விற்பனை கூடத்தில் பல்வேறு ரகம் நெல் மூட்டைகள் நல்ல விலைக்கு விற்பனை போவதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வரலாம் என அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

கேப்சன்...

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்கு குவிந்த நெல்மூட்டைகள்.