Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 50 வேட்பாளர்கள் டெபாசிட் காலி

வேலூர், மே 6: வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 50 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம்(தனி), கே.வி.குப்பம்(தனி) ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்ட மொத்தம் 65 வேட்பாளர்களில் 50 பேர் டெபாசிட் இழந்தனர். வேலூர் தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் வினோத்கண்ணன் (தவெக) வெற்றி பெற்றார். திமுக 2ம் இடம், அதிமுக 3ம் இடம் பிடித்தது. இவர்களை தவிர 12 பேர் டெபாசிட் இழந்தனர்.

காட்பாடியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் தவெக சுதாகர் வெற்றி பெற்றார். அதிமுக 2ம் இடம், திமுக 3ம் இடம் பிடித்தது. இங்கு 12 பேர் டெபாசிட் இழந்தனர். அணைக்கட்டில் போட்டியிட்ட 13 வேட்பாளர்களில் அதிமுக வேலழகன் வெற்றி பெற்றார். திமுக 2ம் இடம், தவெக 3ம் இடம் பிடித்தது. மற்ற 10 பேர் டெபாசிட் இழந்தனர்.

கே.வி.குப்பத்தில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் தவெக தென்றல்குமார் வெற்றி பெற்றார். அதிமுக 2ம் இடம், திமுக 3ம் இடம் பிடித்தது. 8 பேர் டெபாசிட் இழந்தனர். குடியாத்தத்தில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் தவெக சிந்து வெற்றி பெற்றார். தேமுதிக 2ம் இடம், அதிமுக 3ம் இடம் பிடித்தது. 8 பேர் டெபாசிட் இழந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தம் 50 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட்டை இழந்தனர்.