வேலூர், நவ.5: தீபாவளி முன்னிட்டு இன்று முதல் வரும் 7ம் வரை சென்னை, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 15,659 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 680 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, தீபாவளி பண்டிகையொட்டி வேலூர், திருப்பத்தூர், ஆற்காடு, ஆம்பூர், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னை ஒசூர், பெங்களூரூ, சேலம், திருச்சி, கிளாம்பாக்கம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிக்கு 250 சிறப்பு பஸ்கள் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை இயக்கப்படுகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்’ என்றனர்.


