Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலூர் மாநகராட்சியில் இருந்து 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு: திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கமிஷனர் ஆய்வு

வேலூர், நவ.4: வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத மற்றும் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் கழிவுகள், முறையாக பிரித்தெடுக்கப்பட்டு, மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதற்காக சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, நேற்று முன்தினம் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட விருதம்பட்டு பிளாஸ்டிக் கையாளும் மற்றும் மறுசுழற்சி மையத்திலிருந்து, மறுசுழற்சி செய்ய இயலாத 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பராமரிப்பு பணிகளை கமிஷனர் கேத்திரின் சரண்யா ஆய்வு செய்தார். தொடர்ந்து 3வது மண்டலம் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தினை கமிஷனர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சிமென்ட் தொழிற்சாலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பும் நடவடிக்கையால், மாநகராட்சியில் உருவாகும் பயன்பாடற்ற பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதும், எரிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டு, அறிவியல் முறையில் கழிவு மேலாண்மை செய்வதுடன், கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றனர்.