Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சடலமாக கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது பொன்னையாற்று தரைபாலத்தில்

பொன்னை, நவ. 4: மேல்பாடி அருகே பொன்னையாற்று தரைபாலத்தில் சடலமாக கிடந்தவரின் அடையாளம் தெரிந்தது. வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்று தரைப்பாலத்தில் கடந்த 31ம் தேதி சுமார் 60 வயதுள்ள முதியவர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தவலறிந்த மேல்பாடி சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்ைத மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் மேல்பாடியை சேர்ந்த ராஜேந்திரன்(60) என்பது தெரிய வந்தது. இவர் பெங்களூருவில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியிடம், ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மேல்பாடிக்கு வந்துள்ளார். கடந்த 31ம் தேதி இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது தரைபாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.