Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

வேலூர், நவ.3: காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சாவை போைத பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பீகார் மாநிலம் டான்பூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் சங்கமித்திரை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ கார்த்திக் செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் மற்றும் பின்பக்க பொதுப் பெட்டிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பின்பக்க ரயில் பெட்டியில் இருக்கைக்கு கீழ் கேட்பாரற்ற நிலையில் ஒரு பேக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால் அந்த பேக் குறித்து யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து அதை திறந்து பார்த்த போது அதில், 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.