Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டல்; போக்சோவில் ஆய்வக பொறுப்பாளர் கைது

வேலூர், ஆக. 1:காட்பாடி அருகே திருவள்ளுவர் பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆய்வக பொறுப்பாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் திருவள்ளுவர் பல்கலை செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வக பொறுப்பாளராக காட்பாடி கீழ்வடுகன்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி ஆய்வகத்திற்கு சென்ற முதல் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியை கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து அதே மாணவியிடம் கடந்த 24ம் தேதி பல்கலைக்கழக அறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து வகுப்பு துறைத்தலைவரிடமும், போராசிரியரிடமும், தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜசேகரன் மீது பல்கலை நிர்வாகத்தினர் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.