ஒன்றிய அமைச்சரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வடசென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் புதிய கல்வி கொள்கையை ஏற்க்கவில்லை என்றால் ரூ.2152 கோடி நிதி தரமாட்டோம் என்று கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்தும், காவி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த துடிக்கும் பாஜ அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Advertisement