திருச்சி, அக்.29: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கண்ணன்(19). இவர் திருச்சியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்நிலையில், அவரது தந்தை செல்போனில் தொடர்பு கொண்டு சரியாக படிக்கவில்லை என திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் அக்.27ம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


