தொட்டியம், அக்.29: காட்டுப்புத்தூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தனிஷ்குமார் (25), இவரது ஆட்டை கடந்த 27.10.2026 அன்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஆடுகளின் சத்தம் கேட்டு வெளியே வந்து தனிஷ்குமார் துரத்தி சென்று, காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவரை மடக்கிப் பிடித்தார்.
விசாரணையில் ஆட்டை திருடியது மோகனூர் பெரியார் நகரைச் சேர்ந்த பார்த்திபன் (36), லோகேஷ் என்பது தெரியவந்தது. இதில் பார்த்திபனை பொதுமக்கள் காட்டுப்புத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு பார்த்திபனை கைது செய்தனர்.


