Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாட்டிலால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருச்சி, அக்.29: திருச்சி சஞ்சீவிநகர் பகுதியில் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு காசாளராக சந்துரு (24) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அக்.24ம் தேதி இரவு கடைக்கு வந்த 3 பேர் மதுபானம் கேட்டுள்ளனர்.

அதற்கு காசாளர் இரவு 11 மணி கடந்துவிட்டதால் மது கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சந்துரு, மேலாளர் அழகர், ஊழியர் மணிகண்டன் ஆகியோரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கௌசிக்(22), பரத்(21), மற்றும் பிரவீன்(22) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.