திருச்சி,ஆக.29: பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.3,300, 1 டூவீலரை பறிமுதல் செய்தனர். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆக.28ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் புதுக்கோட்டை ரிங் ரோடு, வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்ற புங்கனூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (42) என்பவரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.3,300 பணம் மற்றும் 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.




