திருச்சி, ஆக.29:திருச்சியில் கழிவுநீர் பிரச்னையில் உறவினரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). இவரது உறவினரான வசந்த் (24) என்பவர் எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார், ஆக.25ம் தேதி தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது அந்த கழிவுநீர், கார்த்திக் வீட்டிற்கு செல்லும் பாதை வழியே தேங்கி நின்றது.
இதுகுறித்து வசந்தின் தாயாரிடம், கார்த்திக் கேட்டு உள்ளார். ஆத்திரமடைந்த வசந்த், தகராறில் ஈடுபட்டு, திட்டி கூர்மையான ஆயுதத்தால் கார்த்திக் கன்னத்தில் தாக்கினார். இதில் காயமடைந்த கார்த்திக், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில், கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து வசந்தை கைது செய்தனர்.



