திருச்சி, ஆக.28: திருச்சியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி- திண்டுக்கல் சாலை பிராட்டியூர் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சுற்றித்திரிந்த மலைபட்டியை சேர்ந்த ஆறுமுகம் (45) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் 1.25 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.



