Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனையில் தாலியை பறித்தவர் கைது

திருச்சி, மே 28: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டியிடம் தாலியை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை காவல்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (67). இவரது மனைவி மணிமேகலை. சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் மே.26 ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது மணிமேகலை வார்டில் இருந்தபோது.

கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலியை மர்ம நபர் ஒருவர் பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த சரவணன் (48) என்பவரை கைது செய்தனர்.