Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லால்குடியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க கூட்டம்

லால்குடி, பிப். 27: லால்குடியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்க கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு பயனுள்ள தொழில் நுட்ப விளக்கக் கூட்டம் நேற்று நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வாழை தார் ஊட்டம், நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் போன்றவை குறித்து நேரடி கள விளக்கம் வழங்கப்பட்டது. வாழைதார் ஊட்ட முறை மற்றும் அதன் பயன்கள் பற்றியும், நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு மாணவர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து, தங்கள் விளைச்சலை உயர்த்துவதற்கான வழிமுறைகளை புரிந்து கொண்டனர்.