Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோயிலில் பூஜை பொருட்கள் திருட்டு

திருச்சி, ஆக.26: திருச்சியில் கோயிலில் வைத்திருந்த பூஜை பொருட்கள் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் ஸ்ரீ சுப்புரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று காலை 5 மணியளவில் 3 மர்ம நபர்கள் கோவிலுக்குள் உள்ளே புகுந்து மூலவர் முருகன் கையில் இருந்த அரை கிலோ எடையுள்ள வெள்ளி வேல் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 11 பித்தளை குடங்கள், 11 பித்தளைச் செம்புகள், 11 பித்தளை குத்துவிளக்குகள் பூஜைப் பொருட்களையும் திருடிச் சென்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.