திருச்சி, ஆக.26: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.76 லட்சம், 34 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதாந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகை உள்ளிட்ட காணிக்கைகள் கணக்கெடுக்கப்படும். அதன்படி, ரங்கநாதர் கோயில் உண்டியலானது இணை ஆணையர் சிவராமகிருஷ்ணன் தலைமையில், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ.75,69,761 ரொக்கம், தங்கம் 34 கிராம் 100 மி.கிராமும், வெள்ளி 458 கிராம் மற்றும் 900 மி.கி அளவிலும், 198 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கைகளாக கிடைத்துள்ளது.
+
Advertisement



