துறையூர், அக்.23: துறையூர் நகராட்சி சார்பில் விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நடைபெற்றது. துறையூர் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி நகராட்சி சுகாதார பிரிவு வாயிலாக பொது மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் முன்னிலையில் 22வது வார்டு குடில் ரோடு பகுதியில் உள்ள விமலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு அவரவர் வீடுகளில் தினசரி உருவாகும் கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது பற்றியும், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


