Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குறுகலான கழிவுநீர் வாய்க்கால் சுவருக்கிடையே சிக்கிய பசு மாடு

திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயனேரி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் சுவர்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரி புதுத்தெருவை சேர்ந்தவர் குணசேகர் மகன் பிரசாந்த். இவருக்கு சொந்தமான மாடு அந்த பகுதியில் உள்ள குறுகலான கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் மேய்ந்துள்ளது. அப்பொழுது திடீரென சேறு மற்றும் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் வெளியில் வர முடியாமல் தவித்தது.

இதனைக் கண்ட பொதுமக்கள் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுரேஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவு நீர் வடிகால் வாய்க்கால் சுவர்களின் இடையே சிக்கிக் கொண்டு தவித்த பசுமாட்டை பத்திரமாக மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.