Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது

திருச்சி, அக்.23: திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகையிலை பதுக்கி விற்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அன்னை இல்லம் பகுதியில் உள்ள கடையில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சுரேந்தருக்கு கடந்த 21ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது, புகையிலை வைத்திருந்த சீனிவாசன்(61), பாலாஜி(58) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 64 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2 டூவீலர்கள், செல்போன், ரூ.2300 பறிமுதல் செய்யப்பட்டது.