Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருச்சியில் கனமழை எதிரொலி

திருச்சி, செப்.18: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் மாலை 6.25 மணிக்கு இண்டிகோ விமானம் வந்தடையும். இந்நிலையில் திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை ஆறு மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக இண்டிகோ விமானம் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மாலை 6.25 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரைஇறங்க வேண்டிய விமானம் இடி மழை காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு 7.50 மணி அளவில் தரையிரங்கியது. விமானம் தரையிறங்காமல் வானில் வட்டமிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் சுமார் அரை மணிநேரம் கழித்து விமானம் தரையிறங்கியதும் நிம்மதியடைந்தனர்.