திருச்சி, செப்.18: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் செப்.29ம் தேதி நடைபெறுகிறது. திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தை சார்ந்த படைவீரர், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் செப்.29 அன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த படைவீரர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் (இரட்டைப்பிரதிகளில்) சமர்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


