திருச்சி, செப்.18:திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (செப்.18) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பல்வேறு நிர்வாக காரணங்களால் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சாந்தாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குநா் சாந்தாமணி தெரிவித்துள்ளதாவது:
திருச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.18) வௌ்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த இந்நிலையில், நிர்வாக காரணங்களால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று வேளாண்மைத்துறை இணை இயக்குநா் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.


