துறையூர், அக்.17: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி துறையூர் அருகேயுள்ள சிக்கத்தம்பூர் கிராமத்தில் பேரிடர் கால தற்காப்பு மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு துறையூர் தாசில்தார் சித்ரா தலைமை வகித்தார்.
துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் பணியாளர்கள் பழனிசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட தீ தடுப்புக் குழுவினர் தீ தடுப்பு, வெள்ளம், நில நடுக்கம், மின்சார தாக்குதல், எரிவாயு விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளிலிலுருந்து பொதுமக்கள் தப்பிக்கவும் உடனிருப்பவர்களை மீட்டு முதலுதவி அளிக்கவும் செயல் முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்


