திருச்சி, அக்.17: திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் ரயில் நிலையத்தில் அக்.14ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நிஜாமுதீனில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் 5வது பிளாட்பார்ம் வந்தது. ரயிலின் பொதுப்பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், கேட்பாரற்று கிடந்த 31 கிலோ 315 கிராம் புகையைிலையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


