திருச்சி, அக்.17:ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்த பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அக்.17ம் தேதி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவித்து இருந்தனர். இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


