Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மண்ணச்சநல்லூரில் தனியார் பேருந்து மோதி பசுமாடு பலி

சமயபுரம், அக் 16: மண்ணச்சநல்லூரில் சாலையை கடந்த பசுமாடு தனியார் பேருந்து மோதி உயிரிழந்தது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை நாமக்கல் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று மண்ணச்சநல்லூர் பெருவள வாயக்கால் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற பசுமாடு மீது பேருந்து மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்கத்தில் மாட்டின் தலையை சென்றதில் சினை பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேருந்தை சிறைப்பிடித்தனர். பின்னர் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,

மண்ணச்சநல்லூர் பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மண்ணச்சநல்லூர் பகுதியில் வரும்போது அதிவேகமாக தான் வருகின்றனர். இதனால் விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகிறது. விபத்தில் இறந்த பசுமாடும் உயிர் தான் என்பதை ஓட்டுநர்கள், நடத்துனர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற அதிவேகத்தில் இயக்கி வரும் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.