திருச்சி, அக்.16: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் திருச்சி மெட்ரோ வட்டம் சார்பில் மின் துறையை பொதுத்துறையாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்ற 5 ஆண்டு ஒப்பந்தமுறை முறையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மின்துறை பொறியாளர் அமைப்பு துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், ஐக்கிய சங்க வட்ட செயலாளர் ஞானதுரை, டி.என்.இ.பி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயலாளர் பிரகாசம், செயலாளர் சிவச்செல்வன் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.


