Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரம் இடியுடன் கன மழை

துறையூர், அக்.16: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

துறையூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியான சிக்கத்தம்பூர், பாளையம், முருகூர், கோணப்பாதை, எரகுடி, மெய்யம்பட்டி, காளிப்பட்டி, கரட்டாம்பட்டி, பகளவாடி, சொரத்தூர், பெருமாள்மலைஅடிவாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.