Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த மின்கம்பம்

துவரங்குறிச்சி, ஜூலை 16: துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மருதம்பட்டி அருகே மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து அதில் உள்ள சிமெண்ட் காரைகள் அனைத்தும் ஏடு ஏடாக பெயர்ந்து கொட்டி கம்பிகள் மட்டும் தாங்கி நிற்கின்றன.

மேலும் இந்த மின் கம்பத்தில் இருந்து செல்லக்கூடிய மின் இணைப்புகள் அப்பகுதியில் உள்ள விவசாய பகுதிகளுக்கு செல்வதால் பொதுமக்கள் அவ்வழியே சென்று விவசாயம் செய்ய சற்று அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிதிலமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.