திருச்சி, அக்.15: திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை பகுதியில் பள்ளிக்கூடம் அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் அக்.13ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்கரை பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற காஜாபேட்டை, பசுமடம் வேம்படி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடி பிரகாஷ்ராஜ்(26), நியாமத்துல்லா(18) ஆகிய 2 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 48 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


