Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

செல்போன் திருட முயன்றவர் கைது

திருச்சி, அக்.15: திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் செல்போனை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கிராப்பட்டி ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(47). இவர் அக்.13ம் தேதி காலை திண்டுக்கல் செல்வதற்காக மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்க்காகக் காத்திருந்தார். அப்போது அவரது பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.

அப்போது அருகே நின்ற நபர் செல்போனை திருட முயன்றார். உடனே பொதுமக்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குபதிந்து ஆந்திர மாநிலம், கோதாவரி ராஜ்மந்திரி பகுதியைச் சேர்ந்த ராமுலு (21) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.