Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாஜ அலுவலக மாடியிலிருந்து தவறி விழுந்து காவலாளி சாவு

திருச்சி, அக்.15:திருச்சி பாஜ அலுவலக மாடியில் இருந்து தவறி விழுந்து காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை அருகே உள்ள திருச்சி மாவட்ட பா.ஜ தலைமை அலுவலகத்தில், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் காவலாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் திருச்சி ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) என்பவர் கடந்த ஒரு வார காலமாக பா.ஜ அலுவலகத்தில் இரவு நேர வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை பாஜ அலுவலகத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது பணியில் இருந்த காவலாளி, அலுவலக கதவைத் திறந்து போலீசாரை அமரவைத்து விட்டு மாடிக்குச் சென்ற கணேசன், திடீரென 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.