லால்குடி, அக்.14: லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மைத் துறையில், மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். மேலாண்மை துறைத் தலைவர் சுலைமான் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் தீபாதேவி நன்றி கூறினார்.
மன்றத்தின் தலைவர் அபினஸ்ரீ வரவேற்றார். பேராசிரியர்கள் துறைத் தலைவர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மன்ற நிரவாகிகள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அபினஸ்ரீ, கோகுல், தீக்ஷா, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தர்ஷினி, யுவராஜ், அபிஷேக், முதலாம் ஆண்டு மாணவர்கள் மணிகண்டன், மதன், ஸ்வேதா ஆகியோர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.


