Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஏடிஎம்-ல் பணம் எடுத்தபோது ரூ.4.98 லட்சம் மோசடி

திருச்சி, அக். 14: திருச்சி வயலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்தரன் (49). இவர் எம்பிஏ படித்துவிட்டு பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். அக்.9ம் தேதி இரவு வயலூர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து உள்ளார். அப்போது பணம் எடுத்ததற்கான உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் வந்தது.

அதற்கு அவர் ஆம் (Yes) என்று பதில் அளித்துள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணம் எடுக்கப்பட்டதாக குறுந்செய்தி வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜோ பிராங்க் சுரேந்தரன் ஆன்லைனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.