திருச்சி, அக்.14: திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அக்.12ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இபி ரோடு அருகே போதை மாத்திரை விற்ற வரகனேரி சந்தானபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி முகமது யாசர் (26) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 100 போதை மாத்திரைகள், 1 செல்போன், ரூ.7050 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


