Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை

திருச்சி,பிப்.14: திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் பெருமாள் (48). இவர் மனநோய் பாதிக்கப்பட்டு மாத்திரை உட்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிப்.7ம் தேதி அதிக மாத்திரைகள் உட்கொண்டதில், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனை 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.