Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்சி, பிப். 13: ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் சர்வதேச வணிக நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு சூழல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செயலர் முனைவர் மீனா தலைமை வகித்தார். கல்லூரி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், எம்.எஸ். மற்றும் இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கஜலட்சுமி மற்றும் மேலாண்மைத் துறையின் இயக்குநர் முனைவர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மேலாண்மைத் துறையின் முன்னாள் மாணவியும் ஜப்பானின் NITCO டெக்னாலஜிஸின் விநியோக இயக்குநருமாகிய சுபா சக்கரைவேல் பேசுகையில், தான் உயர்ந்த நிலையை அடைந்ததற்கு கல்லூரியின் கல்வி வழிகாட்டுதலும் கற்றுக் கொண்ட நற்பண்புகளும் தான் காரணம். மாணவிகளாகிய நீங்கள் பேராசிரியர்களின் ஆலோசனைகளை பின்பற்றி உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டும் என்றார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.