திருச்சி, செப்.11: திருச்சியில் ரயிலில் 31 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில் நிலையத்தில் 8வது நடைமேடைக்கு வந்த திருக்குறள் விரைவு ரயிலில் பயணிகள் இருக்கையின் அடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் சென்றனர். அப்போது, அங்கே கிடந்த 31 கிலோ புகையிலை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


