திருச்சி, செப்.11: திருச்சியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் சிறகுகள் அமைப்பு சார்பில் நடத்திய விளையாட்டு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளரும், கல்வி உளவியளாரும் மற்றும் யுகா பெண்கள் நல அமைப்பு தலைவருமான அல்லிராணி பாலாஜி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், பெற்றோர்களுக்கும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடந்த. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரொட்டேரியன் ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். முடிவில் சிறகுகளின் செயலாளர் அந்தோணி கலைச்செழியன் நன்றி கூறினார். விழாவிற்க்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பூபதி, சற்குருநாதன், பழனி மேகலை ஆகியோர் செய்திருந்தனர்.


