Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழக அரசை கண்டித்து மணப்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை, ஜூன் 11: சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வோம் என தவெக தனது தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கடன் தள்ளுபடிக்கு நிபந்தனைகள் விதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று அடுத்த மரவனூர் மற்றும் முத்தபுடையான்பட்டி பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சண்முகம், சந்திரசேகர், பழனிச்சாமி, மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.