துறையூர், அக்.10: உப்பிலியபுரம் அருகே வெங்கடாசலபுரம் மான்ய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச அஞ்சல் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம் உப்பிலிபுயரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் மான்ய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச அஞ்சல் தின விழாவை முன்னிட்டு அஞ்சல் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வைத்தார்.
வெங்கடாசலபுரம் கிளை அஞ்சலக அலுவலர் ஹரிணி, உதவி கிளை அஞ்சலக அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சல் அட்டையில் அஞ்சல் தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலர், தமிழ்நாடு முதலமைச்சர், கல்வி அமைச்சர், ஆகியோருக்கு கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் அனுப்பி வைத்தனர். நிறைவாக பள்ளி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.


