திருச்சி, அக்.10: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அக்.8ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காந்தி மார்க்கெட் சூலக்கரை மாரியம்மன் கோவில் தெரு அருகே கஞ்சா விற்ற தாராநல்லுார் வீரம்மா நகரைச் சேர்ந்த ஹரிஹரன்(20),
வரகனேரி கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ்(23), காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(25), பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த ரெனால்ட்(19) ஆகிய 4 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மேலும் உப்பிலிய தெரு பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


