Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்சியில் தந்தை, மகனை தாக்கியவர்கள் கைது

திருச்சி, அக்.10: திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், இவர் அக்.8ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வேகமாக வந்து, ராஜேஷ் மீது மோதுவது போல் சென்று உள்ளனர். இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ராஜேஷ், மனைவி, மகனை திட்டி மரக்கட்டை மற்றும் அரிவாளால் தாக்கினர். இதில் ராஜேஷ் மற்றும் அவரது மகன் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ரோஷன் (24), கீழதேவதானம் குருசாமி நகரைச் சேர்ந்த அஜய் (18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.