Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துவரங்குறிச்சியில் போதை விழிப்புணர்வு பேரணி

துவரங்குறிச்சி, செப்.10: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 1ம் தேதியில் இருந்து என்சிசி மாணவ, மாணவிகள் முகாம் அமைத்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் என்சிசி லெப்டினன் கர்ணல் சரவணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி பேருந்து நிலையத்திலிருந்து துவரங்குறிச்சி பூத நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் மாணவர்கள் போதை குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் முழக்கங்களையும் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.