Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லாட்டரி விற்றவர் கைது

திருச்சி, செப்.10: திருச்சி இ.பி ரோடு பகுதியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் செப்.8ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இ.பி ரோடு பார்க் அருகே லாட்டரி விற்ற தாராநல்லுார் நாகசுந்தரம் நகரைச் சேர்ந்த வீரன் (38) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.