Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கத்தியால் குத்தி வாலிபர் கொலை

திருச்சி, ஜன. 10: திருச்சி புங்கனூர் கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி அபிராமி, தம்பதியான இவர்களுக்கு 5 வயதில் மகன் மற்றும் 3 வயதில் 1 பெண் குழந்தை உள்ளது. இவர் சபரிமலைக்கு மாலை போட்டு மலைக்கு சென்று விட்டு ஜன. 7ம் தேதி வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் நேற்று மாலை மது போதையில் தனது மனைவி அபிராமியை அடித்து உள்ளார். இதனால் புங்கனூர் மேலத்தெருவில் வசிக்கும் தனது அண்ணன் சீனி (29) யிடம் அபிராமி கூறியுள்ளார். இதையடுத்து சீனி மற்றும் அவரது தம்பி வீரபத்திரன் ஆகிய இருவரும் சுரேஷ் வீட்டிற்கு சென்று தனது தங்கையை ஏன் அடித்தாய் என்று கேட்க சென்றனர். அப்போது தகராறு ஏற்பட்டது.

இதில் சுரேஷ் இரும்பு கத்தியால் சீனியின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார். இதில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வழியிலேயே சீனி உயிரிழந்தார். இவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சோமரசன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை (40) கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.